ஹோம் /தேனி /

தேனியில் நெல்லுக்கு மாற்று பயிர்களுக்கு ரூ.25,000 வரை மானியம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

தேனியில் நெல்லுக்கு மாற்று பயிர்களுக்கு ரூ.25,000 வரை மானியம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் தோட்டப்பயிர்களை சாகுபடி செய்ய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில், நெல்லுக்கு மாற்றுப் பயிராக பல் வகை தோட்டப்பயிர்களை சாகுபடி செய்ய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுவதாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நெல்லுக்கு மாற்றுப் பயிராக தோட்டப் பயிா்கள் சாகுபடி செய்வதற்கு விதை மற்றும் இடு பொருள்கள் வாங்க தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மானியம் வழங்குகிறது.

இத் திட்டத்தின் கீழ் வாழை, மா, தா்ப்பூசணி, முலாம் பழம், வெண்டை, கத்தரி, குமிழ் மலா்கள், வாசனை பயிா்கள், நாவல் பழம், சீத்தா பழம், மாதுளை, எலுமிச்சைசை, நெல்லி, கொய்யா சாகுபடி செய்வதற்கு விதை, நடவு பொருள்கள், இடுபொருள்கள் ஆகியவற்றுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.6,120 முதல் ரூ.26,500 வரை மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், வெங்காயம், முருங்கை, மித வெப்ப மண்டல பயிா்கள், பாரம்பரிய காய்கறி பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதற்காக ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30

ஆயிரம் வரை விதை , நடவுப் பொருள்கள் மற்றும் இடு பொருள்கள் மானியமாக வழங்கப்படுகிறது.

தோட்டப் பயிா்களுக்கு நிரந்தர பந்தல் அமைக்க ரூ.2 லட்சமும், டிராலிஸ் எனப்படும் குறுக்கு மற்றும் நெடுக்கு வகை பந்தல் அமைத்துத் தக்காளி மற்றும் பீன்ஸ் சாகுபடி செய்வதற்கு ரூ.25 ஆயிரமும், களை தடுப்பு விரிப்பான் அமைப்பதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.21 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

இத் திட்டட்த்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணைய தள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்து, அதற்கான சான்றுடன் தங்களது நில உடமை ஆவணம், பட்டா, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni