Home /theni /

தேனியில் எத்தனை வாக்கு சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டன தெரியுமா?

தேனியில் எத்தனை வாக்கு சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டன தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில்,7 வாக்கு சாவடிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டத்தில், வாக்கு சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடந்ததில், 7 வாக்கு சாவடிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.  அப்போது பேசிய அவர், ‘மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காமயக்கவுண்டன் பட்டியில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் இயங்கி வந்தன. தற்போது இப்பள்ளி செயல்படாததால், அதே ஊரில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு 3 வாக்குச்சாவடிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 3 வாக்குச் சாவடிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கம்பம் தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகராட்சி மெயின் தொடக்கப்பள்ளியில் இயங்கி வந்த ஒரு வாக்குச் சாவடி, அங்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலம் செயல்பட்டு வருவதால் அங்கே உள்ள ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலை கிராம மக்கள் அங்கிருந்து 5 கி.மீ தூரமுள்ள சென்ட்ரல் ஸ்டேஷன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியதுள்ளதால், முதுவாக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி