முகப்பு /தேனி /

தேனியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி.. அசத்திய மாணவர்கள்..

தேனியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி.. அசத்திய மாணவர்கள்..

X
தேனியில்

தேனியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

Theni News : தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே நடைபெற்ற சிலம்ப போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வீரபாண்டியில் சிலம்பம் பாண்டி பயிற்சி மையம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த சிலம்பப் போட்டியில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்பாட்ட போட்டியில் சிலம்பாட்டம் வீரர்களுக்கு தேனி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் இளமாறன் ஆகியோர் பங்கேற்று சான்றிதழை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்புரையாற்றிய மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் கூறுகையில், “மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதனை நிறுத்திவிட்டு சிலம்பம் போன்ற கலைகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் பெற வேண்டும். தமிழக அரசு சார்பில் சிலம்பாட்ட போட்டிக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் மாணவர்கள் பங்கேற்று, சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற்று அரசு வேலைகளில் சேர்ந்து பயனடைய வேண்டும்” என்றும் கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் சிலம்ப பயிற்சியாளர்கள், சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பாட்ட வீரர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Local News, Theni