தேனியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில்,தேனி எல்.எஸ் மில்ஸ் அணி வெற்றி பெற்றது.
கூடை பந்து போட்டி :-
தேனி எல்.எஸ். மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் .தேனி ஆயுதப்படை மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில், பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், கூடலூர், ஆண்டிபட்டி என மாவட்டத்தில் உள்ள 15அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் மற்றும் லீக் சுற்று அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
மேலும் படிக்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?
தேனி எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகத்தின் அணியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அணியும் மோதின. இதில் எல்.எஸ் மில்ஸ் அணி 77 க்கு 68 என்ற புள்ளி கணக்கில் எதிரணியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது.
இரண்டாம் இடத்தை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியும், மூன்றாவது இடத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அணியும் மற்றும் 4ம் இடத்தை போடி கூடைப்பந்தாட்ட கழக அணியும் பிடித்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
போட்டியில் வெற்றி அணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கினார் . மூன்று நாட்களாக நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Basket ball, Local News, Sports, Theni