Home /theni /

அரசின் சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்குமா?

அரசின் சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்குமா?

தேனி

தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் சங்கத்தினர்

Theni District Latest News | தமிழக அரசால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர் தேனி மாவட்ட அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகளின் சங்கத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் தேனி மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடிய நலத்திட்ட உதவிகளை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ மாணவர்களுக்கு அரசு வழங்க கூடிய அத்தனை உதவிகளும் வழங்க வேண்டும்.  அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு உயர்கல்வி பயிலும்போது அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு வழங்குவது போல் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் :-

கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, சைக்கிள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட 14 வகை விலையில்லா  பொருள்கள் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அது போலவே மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000, காலை  சிற்றுண்டி மற்றும் IIT, IIS, அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் படிப்பு  செலவை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்றவைகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது போன்ற சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஒரு தரப்பு ஏழை, எளிய மாணவர்களை ஏமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது எனவும் தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகளின் சங்கத்தின் தலைவர் லட்சுமிவாசன் தெரிவித்துள்ளார் .

தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் சங்கத்தினர்


நிர்வாக மானியம் :-

இதுகுறித்து தேனி மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் லட்சுமிவாசன் கூறுகையில், " அரசு உதவிபெறும் பள்ளிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக தாய் மொழிவழிக் கல்வியை பயிற்றுவித்து வரும் பள்ளிகளாகும். பல பகுதிகளில் அரசுப் பள்ளிகளே இல்லாத இடங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியை கொண்டுபோய் சேர்ப்பது உதவி பெறும் பள்ளிகள் தான். எனவே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி என்று வேறுபாடு பார்க்காமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் .

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து  காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்ப ஏதுவாக அரசாணை எண்.165 ஐ முற்றிலுமாக நீக்கவேண்டும்.

உதவிபெறும் பள்ளிகளுக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்ததைப் போல நிர்வாக மானியம் (MG) 4% என உயர்த்தி வழங்க வேண்டும்.

தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் சங்கத்தினர்


TET தகுதித் தேர்வு இன்றி நியமனம் பெற்ற 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சிறுபான்மை பள்ளி சிறுபான்மை அல்லாத பள்ளி என வேறுபாடு காட்டாது அனைத்துப் பலன்களையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கூட்டத்தில் அனைத்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் சங்கச் செயலாளர் வேணுகோபால் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Published by:Arun
First published:

Tags: Education, Local News, Theni

அடுத்த செய்தி