ஹோம் /தேனி /

தேனி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி 

தேனி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி 

X
தேனி

தேனி

Theni News : தேனி மாவட்டம் கம்பம் நகரில் தீயணைப்புத்துறையினர் சார்பில் வனத்துறை ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சியும் செயல்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாயத்திற்குட்பட்ட வன ஊழியர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீ தடுப்பு குறித்த பயிற்சியானது கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கம்பம் கிழக்கு வனச்சரகர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி அலுவலர் குமரேசன் முன்னிலை வகித்து வன ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சியினை வழங்கினார்.

இதில் நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டோரை மீட்பது தொடர்பான அறிவுரையும் ,அடர்ந்த காடுகளில் ஏற்படும் தீ விபத்து, பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதையும் படிங்க : 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிப்பு? - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

மேலும் வனப்பகுதியில் விபத்தில் சிக்கிய நபர்களை விரைவாக எவ்வாறு மீட்பது என தத்ரூபமாக தீயணைப்புத் துறையினர் மூலம் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி, ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் கம்பம், சின்னமனூர், வருசநாடு, கூடலூரில் இருந்து வனசரகர்கள், தீ தடுப்பு காவலர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni