முகப்பு /தேனி /

பருத்திவீரன் செவ்வாழை ராசு காலமானார்.. இயக்குனர் பாரதிராஜா நேரில் அஞ்சலி!

பருத்திவீரன் செவ்வாழை ராசு காலமானார்.. இயக்குனர் பாரதிராஜா நேரில் அஞ்சலி!

X
இயக்குனர்

இயக்குனர் பாரதிராஜா நேரில் அஞ்சலி

sevvalai rasu passed away | பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

செவ்வாழை ராசு மரணம் :-

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வந்தவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 70 வயதாகும் செவ்வாழை ராசு. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்திருந்த நிலையில் நேற்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தேனி மாவட்டத்தில் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் புகழ்பெற்ற செவ்வாழை ராசு மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவால் கிழக்கு சீமை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆகி பருத்திவீரன் மைனா கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் செவ்வாழை ராசு.

இவரை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் பாரதிராஜா செவ்வாழை ராசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். செவ்வாழை ராசுவின் சொந்த ஊரான வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Death, Local News, Theni