ஹோம் /தேனி /

தேனி மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனி போடியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் வர போகுதாம்..!

தேனி மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனி போடியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் வர போகுதாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

போடியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram | Bodinayakanur (Bodinayakkanur) | Chennai [Madras] | Chennai

சென்னை-தேனி - போடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ஆகிய இரண்டு அகல பாதைகளில் விரைவில் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில், பெரிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இரட்டை பாதை வசதி உள்ளது. ரயில் வசதியுள்ள மாவட்ட நகரங்களிலும், இரட்டை பாதை வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 38 கிலோ மீட்டருக்கான அகலப்பாதை பணி முடிந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்க உள்ளோம்.

இதையும் படிங்க | தேனியில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றதா? பொதுமக்கள் விமர்சனம் இதோ

தேனி - போடி இடையே 17 கி.மீ., துாரத்திற்கான அகலப்பாதை பணிகள் இந்த மாதம் (அக்டோபர்) நிறைவடையும். இந்த தடத்திலும், ரயில் சேவையை துவங்க உள்ளோம். குறிப்பாக, போடியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Bodinayakanur Constituency, Chennai, Southern railway, Theni, Train