ஹோம் /தேனி /

கம்பம் உழவர் சந்தையில் டிஜிட்டல் விலைப்பட்டியல்  

கம்பம் உழவர் சந்தையில் டிஜிட்டல் விலைப்பட்டியல்  

X
கம்பம்

கம்பம் உழவர் சந்தை

Theni District News : தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் எளிதாக காய்கறிகளின் தினசரி விலையை அறியும் வகையில் டிஜிட்டல் விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் எளிதாக காய்கறிகளின் தினசரி விலையை அறியும் வகையில் டிஜிட்டல் விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தை :

விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோரிடம் தங்கள் விவசாயம் செய்த காய்கறிகளை விற்பதற்கு உருவாக்கப்பட்டது உழவர் சந்தை. விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக அமையும் உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் .

குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் காய்கறி விவசாயம் மேற்கொள்வதால் கம்பம் உழவர் சந்தை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. கேரளவாழ் பொதுமக்களும் கம்பம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்குவதால் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை ஆகிறது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை... முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

டிஜிட்டல் அறிவிப்பு பலகை :

பொதுமக்களின் வசதிக்காக உழவர் சந்தையில் காய்கறிகளின் விற்பனை விலைப்பட்டியல் அங்குள்ள பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். தினசரி உழவர் சந்தை நிலைய அதிகாரிகள் காய்கறிகளின் விலை பட்டியலை மாற்றி எழுதுவர்.

இந்நிலையில், காய்கறிகளின் விலை பட்டியலை டிஜிட்டல் முறையில் தெரிவிக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகை கம்பம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் தேனி உழவர் சந்தைக்கு அடுத்தபடியாக கம்பம் உழவர் சந்தையில் இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை நிலை அதிகாரிகள் தங்களது செல்போனில் உள்ள மென்பொருள் மூலமாக தினசரி காய்களின் விலைகளை பதிவு செய்வதன் அடிப்படையில் டிஜிட்டல் பலகையில் காய்களின் விலைப்பட்டியல் தோன்றுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் விலைப்பட்டியல் மட்டுமல்லாமல் அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது. தினசரி காய்கறி விலைகளை செல்போனில் இருந்தபடியே அப்டேட் செய்து டிஜிட்டல் பலகையில் விலைப்பட்டியல் வெளியிடப்படுவதால் பணிச்சமை குறைவதாகவும் டிஜிட்டல் அறிவிப்பு பலகையினால் பொதுமக்கள் எளிதாக விலைப்பட்டியலை அறிந்து கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni