முகப்பு /தேனி /

கூடலூர் முத்துமாரியம்மன் கோயிலில் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

கூடலூர் முத்துமாரியம்மன் கோயிலில் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

X
அழகு

அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Gudalur Muthumariamman Temple | தேனி மாவட்டம் கூடலூரில் ஸ்ரீமுனியாண்டி சுவாமி செல்வமுத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீமுனியாண்டி சுவாமி செல்வ முத்துமாரியம்மன் கோவில் இந்த வருட சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஸ்ரீமுனியாண்டி சுவாமி செல்வ முத்துமாரியம்மன் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி பூக்குழி இறங்கி முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது இக்கோயிலின் சிறப்பாகும்.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் அழகு குத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வேல் அழகு குத்தி பால்குடம் எடுத்து நகரின் முக்கிய முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் வடக்கு காளியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 16 அடி நீளத்தில் வேல் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நகரின் முக்கிய முக்கிய வீதிகளில் அம்மனின் நிறைந்த அருளுடன் ஊர்வலமாக வந்தனர்.

அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் பின்னர் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். கூடலூரில் புகழ்பெற்ற இக்கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Local News, Theni