ஹோம் /தேனி /

சுருளியில் ஐயப்பனை தோளில் சுமந்து ஆராட்டு விழா நடத்திய பக்தர்கள்

சுருளியில் ஐயப்பனை தோளில் சுமந்து ஆராட்டு விழா நடத்திய பக்தர்கள்

தேனி

தேனி சுருளி அருவி - ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

Swami Iyappa : கார்த்திகை முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவிப்பகுதியில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சுருளி அருவியில் உள்ள அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

கார்த்திகை முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவிப்பகுதியில் உள்ள கோயில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சுருளி அருவியில் உள்ள ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

கார்த்திகை முதல் நாளில் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் சுருளிக்கு வந்து அருவிப்பகுதியில் குளித்து சுருளிமலை ஸ்ரீ அய்யப்பசாமி கோவில், பூதநாராயணன் கோவில், சுருளி வேலப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குருசாமிகள் மூலம் மாலை அணிந்து கொண்டனர்.

பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, ஐயப்பனுக்கு ஆராட்டு மற்றும் பஜனை செய்து ஐயப்பனை வழிபட்டு வருவர்.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவி பகுதியில் உள்ள அய்யப்பசாமி கோயிலில் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த நபர்கள், ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களும் இணைந்து ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடத்தினர்.

இதையும் படிங்க : ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

சுருளிமலை ஸ்ரீஐயப்பசாமி கோயில் சன்னதியில் இருந்து ஐயப்பனுக்கு படி பூஜை செய்து சுருளி அருவியில் ஐயப்பனை நீராட்டி பின் ஐயப்பனை பல்லக்கில் தோள் சுமையாக சுமந்து வந்து ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடத்தினர் ஐயப்ப பக்தர்கள்.

சுருளிமலை ஸ்ரீஐயப்பசாமி கோவில் உற்சவருக்கு குருசாமி கதிரேசன், டிரஸ்டி பொன்காட்சிக் கண்ணன் தலைமையில் எட்டாம் ஆண்டு ஆராட்டு நடைபெற்றது.

இதையடுத்து விரதமிருந்த பக்தர்கள் கருப்பு, காவி உடை அனிந்து, துளசி மாலை, சந்தன மாலைகளை சரண கோஷம் மூழங்க, உற்சவர் முன்பு குருசாமி கையால் அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தை தொடங்கினர்.

இதையடுத்து ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் கணேசன் கணபதிஹோமம், சிறப்பு அபிஷேககத்ஙதடன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆராட்டு விழாவில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் பஜனையும் நடத்தப்பட்டது. பஜனை பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni