முகப்பு /தேனி /

தேனி வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா.. குதிரை வாகனத்தில் நகர்வலம்..

தேனி வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா.. குதிரை வாகனத்தில் நகர்வலம்..

X
வீரப்ப

வீரப்ப அய்யனார் கோயில் 

Theni Veerapa Ayyanar Temple Chithirai Festival 2023 : சித்திரை திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற தேனி வீரப்ப அய்யனார் கோயிலின் நகர் வலம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த வீரப்ப அய்யனார் திருக்கோயில். வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தற்போது வீரப்ப அய்யனார் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது . சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீரப்பயனார் குதிரை வாகனத்தில் அமர்ந்து நகர்வலம் புறப்பாடு நடைபெற்றது.

முன்னதாக வீரப்பயனார் கோயிலில் மூலவர் அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ஆலய வளாகத்தில் அய்யனாரை வணங்கி ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி சென்றனர். குதிரை வாகனத்தில் உற்சவ வீரப்பா அய்யனார் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக காட்சியளித்தார்.

செண்டை மேளம் நாதஸ்வர முழங்க வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக செல்லும் நகர் வளம் புறப்பாடு தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் ஆடி வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீரப்ப அய்யனார் கோவிலில் இருந்து நகர் வளம் தொடங்கி நான்கு வீதிகள் வழியாக தேனி முக்கிய சாலை வழியாக சென்று பங்களா மேடு சோலைமலை அய்யனார் கோயிலை சென்று அடைந்தது. இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Theni