முகப்பு /தேனி /

சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வேண்டி தேனியில் 10 ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வேண்டி தேனியில் 10 ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

X
ஆர்ப்பாட்டத்தில்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர்

Theni district | தேனி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி தேனி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி, தேனி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தேனி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் சார்பில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஸ் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் தாக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கும் சமூக ஆர்வலர்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோட்டூர் ஊராட்சியில் முறையற்ற செயல்பாடுகளை ஆர்டிஐ மூலமாக கேட்டதில் பேராசிரியர் ராஜா அவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து பேராசிரியர் ராஜா குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Read More : ஓடும் கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன் தெரியுமா? காரணம் இதுதான்..!

அத்துடன், வீரபாண்டி பேரூராட்சி ஓடைப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சிகளில் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்தும், வீரபாண்டி காவல் நிலையத்தில் பேராசிரியர் ராஜமீது பொய் வழக்கு போட்டு ஒரு தலைவட்சமாக உதவி ஆய்வாளர்செயல்படுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Social activist, Theni