ஹோம் /தேனி /

திருடர்கள் உஷார்.. கடை வீதிகளில் மக்கள் கூட்டம்.. தேனி போலீசார் எச்சரிக்கை   

திருடர்கள் உஷார்.. கடை வீதிகளில் மக்கள் கூட்டம்.. தேனி போலீசார் எச்சரிக்கை   

தேனி

தேனி

Theni Deepavali Shopping | தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கூட்டத்தைப் பயன்படுத்தி, திருடர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களுக்கு போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி தற்போது விற்பனை களைகட்டியுள்ளது.  அதன்படி தேனி மாவட்டத்தில்  தேனி,

சின்னமனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், கூடலூர், போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்காக பொருள்களை வாங்க மாலை நேரங்களில் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது . தீபாவளி பண்டிகைக்காக மக்கள் புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வாங்க குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளில் குவிகின்றனர். இந்த கூட்டத்தில் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் தமிழக காவல்துறை சார்பில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு பணிகள் :-

தீபாவளி பண்டிகைக்காக தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் 12 இடங்களுக்கு மேல் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களை போலீசார் அமைத்துள்ளனர் . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

மேலும் படிக்க:  போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . கம்பம் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஞானபண்டிதநேரு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மளிகை பொருட்கள், புத்தாடைகள், பட்டாசு இனிப்புகள் போன்றவைகள் வாங்க இரவு நேரங்களில் கடைவீதிக்கு வருவதால் இரவு நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த 19 கண்காணிப்பு குழுக்களும் , பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் போலீஸாரால் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருடர்கள் பற்றிய அறிவிப்பு பலகையும் , திருடர்களின் புகைப்படம் கூடிய பலகையும் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் , தீபாவளி பண்டிகை கண்காணிப்புக்கென சிறப்பாக டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் எஸ்ஐ என 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Theni