Home /theni /

காமயகவுண்டன்பட்டியில் வருகிறது தினசரி உழவர் சந்தை.. காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஹேப்பி..

காமயகவுண்டன்பட்டியில் வருகிறது தினசரி உழவர் சந்தை.. காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஹேப்பி..

தேனி

தேனி கே.கே.பட்டி

Theni District News | தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடு இன்றி உள்ள நடுநிலைப் பள்ளியின் வளாகத்தில் தினசரி உழவர் சந்தை அமைக்க முழு முயற்சிகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் தினசரி உழவர் சந்தை அமைப்பதற்கான பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியை சுற்றியுள்ள அணைப்பட்டி, நாராயணன்தேவன் பட்டி,  பூசாரி கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் பெருமளவில் நடை பெற்று வருகிறது .

காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமத்தினர் காய்கறி வாங்க கம்பம் உழவர் சந்தையிலும், உத்தமபாளையம் வாரச்சந்தையிலும் சென்று காய்கறிகளை வாங்கி வருகின்றனர் .

இதனால் காமய கவுண்டன்பட்டி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர் எளிதாக காய்கறிகளை வாங்கும் நோக்கத்தோடு காமயகவுண்டன் பட்டியில் தினசரி உழவர் சந்தை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் எளிதாக வாங்க முடியும் என்று பேரூராட்சி நிர்வாகம் உழவர் சந்தை அமைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடற்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் காய்கறி தினசரி உழவர் சந்தை அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில் , காமிகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன் உழவர் சந்தை அமைப்பதற்காக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அமைதி உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விரைவில் உழவர் சந்தை :-

இது குறித்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், " அணைப்பட்டி, பூசாரி கவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தாய் கிராமமான காமயகவுண்டன்பட்டியில் உழவர் சந்தை அமைந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் .

இதற்காக காமகவுண்டன்பட்டி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடற்று உள்ள நடுநிலைப் பள்ளியின் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியுள்ளோம். அந்த இடத்தின் கட்டடங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் சேதம் அடைந்து மேற்கோரைகள் இடிந்து விழும் நிலையிலும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது.

இந்த இடத்தில் மீண்டும் பள்ளி நடத்த முடியாத காரணத்தினால் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடற்று உள்ளது . இந்த இடத்தில் உழவர் சந்தை அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முழுமையாக ஒரு மாதத்திற்குள் அனுமதி பெற்று உழவர் சந்தை அமைப்பதற்கான பணியை தொடங்க உள்ளோம்" என்றார்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி