Home /theni /

பனை மரங்களுக்காக தமிழகம் முழுவதும் சைக்கிளில் சிறுவர்களுடன் நெடும் பயணம்...

பனை மரங்களுக்காக தமிழகம் முழுவதும் சைக்கிளில் சிறுவர்களுடன் நெடும் பயணம்...

தேனி

தேனி - பனை மரங்களுக்காக சைக்கிளில் நெடும் பயணம்...

Theni District News | விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர் பனைமரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சைக்கிள் பயணம் செய்து வரும் நிலையில் தற்போது தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக முழுவதும் மிதிவண்டி பயணத்தை தொடங்கியுள்ள  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் தற்போது தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் விழிப்புணர்வு நெடும் பயணம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்..

தற்காலத்தில் பனைமரம் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்றவைகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பனையேறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக விளங்கும் முக்கிய பிரச்சனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் 7 பேர் தமிழகம் முழுவதும் மிதிவண்டி பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இரண்டாம் கட்ட ஆறாம் திணை (பனை) மிதிவண்டி பயணம் 2022 என்ற பெயரில் இரண்டாம் கட்ட மிதிவண்டி பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று  கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 1,500 கிலோ மீட்டருக்கு மேல் மிதிவண்டி பயணம் செய்து தற்போது தேனி மாவட்டத்தில் பனை மரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு பனைமரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பனை மரங்களுக்காக சைக்கிளில் நெடும் பயணம்...


இந்த மிதிவண்டி பயணத்தில் 42 வயதாகும் பாண்டியன் தலைமையில் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவினர் , கடந்த ஆகஸ்ட் மாதம் மிதிவண்டி பயணத்தை தொடங்கி தற்போது தேனி மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரிக்கு சென்று அங்கிருந்து சென்னை வரை மீண்டும் சைக்கிள் பயணமாக சென்று இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

கோரிக்கைகள் :-

இந்த மிதிவண்டி பயணம் குறித்து பனையேறியான பாண்டியன் கூறுகையில், " விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் மற்றும் சிறுவர்களான வீனஸ், செம்மொழி, அணி நிலா ஆகியோர் ஒன்றிணைந்து இந்த மிதிவண்டிப் பயணத்தை தொடங்கியுள்ளோம். மிதிவண்டி பயணத்தை தொடங்க உள்ளோம் என்று நாங்கள் முடிவு எடுத்த பின்பு பனைமரம் மீது உள்ள பற்று காரணமாக குழந்தைகளும் இந்த பயணத்தில் தொடர்வதாக விரும்பினர். சிறுவர்கள் உட்பட தற்போது 1,500 கிலோ மீட்டருக்கும் மேல் மிதிவண்டி பயணத்தை செய்துள்ளோம்.

சைக்கிளில் சிறுவர்களுடன் நெடும் பயணம்...


தமிழ் குடிகளின் அடையாளமான கள்ளை விரும்பும் மக்கள், உணவாகவும் மருந்தாகவும் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளும் வகையில், கள் இறக்கவும் பருகவும் விற்பனை செய்யவும் பனையேறிகளுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டி கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பதனை அறிவித்து கள்ளுக்கான தடையை தமிழ்நாடு அரசு உடனடியாக நீக்க வேண்டும்,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கள் இறக்கும் தொழிலாளர்களை தமிழக அரசு கள் இறக்கும் தொழிலாளர்கள் என்று ஆவண பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பனை மற்றும் பனையேறும் தொழிலாளிகள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் பனை பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்த இந்த மிதிவண்டி பயணத்தை தொடங்கியுள்ளோம் என்றார்..
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி