Home /theni /

Theni : அதிரடி காட்டிய சைபர் கிரைம் போலீசார் - ₹15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்பு..

Theni : அதிரடி காட்டிய சைபர் கிரைம் போலீசார் - ₹15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்பு..

தேனி

தேனி சைபர் கிரைம் போலீசார்..

Theni District : தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

மேலும் படிக்கவும் ...
தேனி மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் தொலைந்து போனது குறித்து வந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் பாக்கியம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு, திருட்டுபோன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து, மீட்கப்பட்ட செல்போன்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட செல்போன்கள் :-

தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானதாக கூறி பல்வேறு காவல் நிலையங்களில் 1,365 புகார்கள் அளிகப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காணாமல் போன 100 செல்போன்களில் 47 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிப்ரவரி மாதத்தில் காணாமல் போன 73 செல்போன்களில் 33 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் 142 போன்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் 103 போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் 175 போன்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் ‌‌‌‌92 போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மே மாதத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 147 செல் போன்களில் 78 போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை 126 போன்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதில் 23 போன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த ஆறு மாதத்தில் காணாமல் போன 763 போன்களில் 714 போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் காணாமல் போன 651 செல் போன்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதில் ஏற்கனவே 714 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது மேலும், 110 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Cyber crime, Local News, Theni

அடுத்த செய்தி