Home /theni /

Theni | கால், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை- கம்பத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

Theni | கால், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை- கம்பத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

தேனி

தேனி அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற இலவச அக்குபஞ்சர் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India
ஸ்ரீ சஞ்சீவி அக்குபஞ்சா் கிளினிக் சார்பாக, கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் கிராம மக்களுக்கு அக்குபஞ்சர் முறையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .

மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் கிராமத்தில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்ரீ சஞ்சீவி அக்குபஞ்சா் கிளினிக் சார்பாக ஆங்கூர் பாளையம் கிராம மக்களுக்கு மருத்துவா் காா்த்திகா தலைமையில் ஆங்கூா்பாளையம் ஜெயபாரதி துவக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அக்குபஞ்சர் சிகிச்சையில் மருத்துவர்


கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உண்டாகும் உடல் சார்ந்த பிரச்சனைகளை அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தவும் அவர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முகாம் நடைபெற்றது.

அக்குபஞ்சர் சிகிச்சையில் பெண்


அக்குபஞ்சர் முறையில் என்னென்ன சிகிச்சை முறைகள் செய்யலாம் எவ்வாறு குணமடையும் என்பதை பொது மக்களுக்கு விளக்கும் விதமாகவும் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அக்குபஞ்சர் சிகிச்சையில் மருத்துவர்


கை வலி, கால் வலி, உடல் வலி ,மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு இயற்கை வைத்தியம், அக்குபஞ்சர், தொடு வர்மம், பாத அழுத்த சிகிச்சை, கப்பிங் ஹிஜாமா முறையில் இந்த முகாமில் கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி