தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வசித்து வரும் காஞ்சனா என்ற பெண்மணி வீட்டிலேயே சோப் ஆயில், பினாயில், ப்ளீச் வாஷிங் பவுடர், வாஷிங் சோப் குளியல் சோப் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து மாத வருமானமாக 15 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டி வருகிறார்.
சுயதொழில்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதாகும் காஞ்சனா. இவரது கணவர் முருகன் ஆட்டோ டிரைவராக உள்ளார். திருமணம் முடிந்த பின்பு ஏதேனும் ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும் என்று எண்ணிய இவர் வீட்டில் இருதபடியே என்ன தொழிலை செய்யலாம் என்று தொடர்ந்து தேடி வந்துள்ளார். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்த தொழில் சோப் ஆயில் தயாரிக்கும் தொழில்.
பின்னர் ஆன்லைன் மூலம் எவ்வாறு வீட்டில் இருந்து வாஷிங் பவுடர் சோப் ஆயில் பினாயில் போன்ற பொருட்களை தயாரிப்பது தொடர்பாக தெரிந்து கொண்டு, சோப் ஆயில், பினாயில், வெள்ளை துணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிளீச், வாஷிங் பவுடர் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளார்.
பின் இயற்கை முறையில் தயாராக கூடிய கிளிசரின் சோப் தயாரிப்பதற்கும் கற்றுக்கொண்டு உள்ளார். இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சை பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கு மூலிகைகள் மூலம் சிறிய அளவில் சோப் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் தயாரித்த சோப்புகளை ஒன்றரைவயது குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதால் மார்க்கெட்டில் வேகமாக விற்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து செந்தூரா என்ற பெயரில் சோப் ஆயில் மற்றும் சோப் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.வீட்டில் இருந்தபடியே செந்தூரா நிறுவனத்தை நடத்தும் பெண் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார் காஞ்சனா.
முகம் பொலிவு பெறுவதற்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதற்கும் இவர் தயார் செய்த சோப்பு பயன்படுவதாக கூறுகிறார் காஞ்சனா. மேலும் கல்லூரி பெண்களை கவரும் வகையில் பூ மற்றும் ஹார்ட் வடிவிலான சோப்புகளை தயாரித்து கண் கவரும் வகையிலான பேக்கிங்கில் விற்பனை செய்ததன் மூலம் சோப்புகள் அதிகளவில் விற்கத் தொடங்கியது எனவும் கூறுகிறார் காஞ்சனா.
சோப்புகள் 15 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், சோப் ஆயில் பினாயில் போன்ற பொருட்கள் 30 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்பனை ஆவதாகவும் சில்லறை விற்பனையை காட்டிலும் மொத்த விற்பனையில் கவனம் செலுத்துவதால் அதிகபட்ச வருமானத்தை பெற முடிவதாக கூறுகிறார் காஞ்சனா.
இந்த தொழிலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தல் ₹5,000 வரை வருமானம் பெறலாம் எனவும் ஆண்டுக்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை வருமானம் பெறுவதாகும் கூறுகிறார் பெண் தொழில் முனைவோர் காஞ்சனா முருகன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship, Local News, Theni