Home /theni /

தண்ணீரை சேமிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? கம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

தண்ணீரை சேமிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? கம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

தேனியில்

தேனியில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு

Theni District News : நீரின் தேவையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் நீரை சேமிக்கத் தவறினால் உண்டாகும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் கம்பம் பகுதியில் நீர் மேலாண்மை குறித்த கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சார்பாக கம்பம் பகுதியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கும் விதமாக நீர் மேலாண்மை குறித்த கோஷங்கள் எழுப்பியபடி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

தற்போது பொதுமக்கள் மத்தியில் நீர் மேலாண்மை மற்றும் தண்ணீரை சேமிப்பதற்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், தண்ணீரை சேமிப்பதற்கு பொதுமக்கள் முயற்சி எடுப்பதற்கும் மழை நீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் தண்ணீரை சேமிக்காமலும், சரியான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தவறினாலும் உண்டாகும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் கம்பம் பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.

வழியெங்கும் நீர் மேலாண்மை கோஷங்களுடன் கையில் நீர் மேலாண்மை குறித்த பதாகைகளை ஏந்தியபடியும் , கம்பம் புது பள்ளிவாசல் பகுதியில் ஊர்வலத்தை தொடங்கி நாட்டுக்கள் வழியாக வந்து மீண்டும் புது பள்ளிவாசல் அருகிலேயே ஊர்வலத்தை முடித்துக் கொண்டனர் பள்ளி மாணவ மாணவிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஊர்வலத்தை கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து , மாணவர்களுடன் சேர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி