Home /theni /

தொட்டமந்துறை மாசாணி அம்மன் கோவிலில் நள்ளிரவில் களைகட்டிய மயான பூஜை..

தொட்டமந்துறை மாசாணி அம்மன் கோவிலில் நள்ளிரவில் களைகட்டிய மயான பூஜை..

தொட்டமந்துறை

தொட்டமந்துறை மாசாணி அம்மன் கோவில்

Cumbum Thottamandurai Masani Amman Temple : தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தொட்டமந்துறை பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி மகாராணி மாசாணி அம்மன் திருக்கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு மயான பூஜை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் கம்பம் தொட்டமந்துறை பகுதியில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவானது ஆடி மாதம் 12ஆம் தேதி ( ஜூலை 28) கொடியேற்றத்துடன் தொடங்கி 18 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 18 நாள் திருவிழாவில் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், கரகம் எடுத்தல், சீர் கொண்டு வருதல், மயான பூஜை, குண்டம் இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை இன்று (ஆகஸ்ட் 10) நள்ளிரவு 12 மணிக்கு திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.

மாசாணி அம்மன், பூமியில் பெண் ரூபத்தில் அவதாரம் எடுத்து வாழ்ந்து கொண்டிருந்த போது அரசர் ஒருவரால் அநீதியாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பெண் தெய்வமான மாசாணி அம்மன் மரணித்து இருப்பதை அறிந்த, பகவான் ஸ்ரீ ராமர் தியானம் செய்து மீண்டும் மாசாணி அம்மனை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு தான் இந்த மயான பூஜை.

மயான பூஜை


அநீதியால் கொல்லப்பட்டு உயிர்த்தெழுந்த மாசாணி அம்மன் ஆக்ரோஷமாக இருந்ததால், மாசாணி அம்மனை சாந்தப்படுத்த பொதுமக்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் 12 அன்று இந்த நிகழ்வு இங்கு நடைபெற உள்ளது.

அநீதியால் மரணித்த தூய ஆத்மாக்களுக்கு வரமளிக்க மாசாணி அம்மன் ஆத்மாக்கள் இருக்கும் மயானத்திற்கு சென்று வரம் வழங்கும் நிகழ்வும் இந்த மயான பூஜை நிகழ்வில் நடைபெறும் என  கூறப்படுகிறது.


மாசாணி அம்மன்


மயான பூஜை :-

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை போன்றே கம்பம் பகுதியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலிலும் குண்டம் திருவிழா நடைபெற்றது.


மாசாணி அம்மன் கோவிலில் மயான பூஜை


விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்றது. மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான தலைமை அருளாளியார் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் தொட்டமண்துறை முல்லைப் பெரியாற்றில் மூழ்கி தீர்த்தம் எடுத்து மீண்டும் மாசாணி அம்மன் சன்னதிக்கு வந்து கோவில் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்ணாலான மாசாணி அம்மனின் மயான பூஜை செய்யும் இடத்திற்கு வந்தார்.


மாசாணி அம்மன் கோவிலில் மயான பூஜை


திரையால் மூடப்பட்டிருந்த மாசாணி அம்மன் பம்பை மேளதாங்கள் முழங்க அம்மனின் திரு உருவம் திறக்கப்பட்டு அங்கு திரளாக வந்திருந்த பக்தர்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எலுமிச்சை மாலை, பூக்கள், மயான சேலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த மாசாணி அம்மனை பம்பைக்காரர் பம்பை வாத்தியத்தின் மூலம் பாடல்களைப் பாடி எழுந்தருளச் செய்து அருளாளிக்கு அருள் வர செய்தார். ஆக்ரோஷமாக ஆடிய அருளாளி அம்மனின் உருவத்தை சிதைத்து அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடி மண் எடுக்கப்பட்டு, வாயில் எலும்பு மற்றும் கையில் மண்டை ஓட்டை ஏந்தி ஆக்ரோஷமாக நடனமாடி மயான பூஜையை நிறைவு செய்தார். இந்த நிகழ்வை காண கம்பம் வட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி