தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ரேஞ்சர் ஆபீஸ் சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது . இந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் சென்று பள்ளி நிர்வாகத்திடம் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்தது தொடர்பாக புகார் தெரிவித்து பள்ளியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகையில் , " தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்னும் ஆசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் , அவர் மேல் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பல்வேறு குற்றச்சாட்டு :-
மேலும் ஏற்கனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது . மீண்டும் அவர் வேறு ஒரு பள்ளிக்கு சேர்ந்து, பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே அந்தப் பள்ளியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: தேனி மாவட்டத்தின் அருமை, பெருமைகளை கூறும் அருங்காட்சியகம்.! இங்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா..!
பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த ஆசிரியர் கம்பம் ரேஞ்சர் ஆபிஸ் ரோட்டில் உள்ள அதே பள்ளியில் மீண்டும் பணிக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார் எனவும், பள்ளி கட்டிட வளாகத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை எனவும் , அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பள்ளி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது . தற்போது மீண்டும் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த பள்ளி மீது பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் , " பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியரின் மீது போக்ஸோ சட்டம் பதியப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பள்ளி மாணவி மீது ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த விவகாரம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, POCSO case, Theni