Home /theni /

சுருளி அருவியில் 9வது நாளாக குளிக்க தடை - சின்ன சுருளி அருவியில் அனுமதி  

சுருளி அருவியில் 9வது நாளாக குளிக்க தடை - சின்ன சுருளி அருவியில் அனுமதி  

கம்பம்

கம்பம் சுருளி அருவி

Theni Suruli Falls : கம்பம் அருகே சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 9வது நாளாக சுருளி அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மதுரை கோயம்புத்தூர் உட்பட தேனி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. சுருளி வனப்பகுதியில் உள்ள தூவானம் அணை பகுதி அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் நேற்று பலத்த மழை பெய்தது.


கம்பம் சுருளி அருவி


இதன் காரணமாக, சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 2-ஆம் தேதி முதல் சுருளி அருவி மூடப்பட்டது. தொடர்ந்து சுருளி அருவி பகுதியில் மழை பெய்து வருவதால் அருவிப் பகுதியில் நீர் வரத்து குறையாமலேயே உள்ளது.


கம்பம் சுருளி அருவி


மேலும், கன மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  பொது மக்களின் பாதுகாப்பு கருதி அருவி  பகுதியில் நீர் குறையும் வரை சுருளி அருவி திறக்கப்பட வாய்ப்பில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கம்பம் சுருளி அருவி


அதேபோல சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால், அருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி