ஹோம் /தேனி /

தேனியில் ரேஷன் அரிசி கடத்தும் பெண்கள்.. சாட்டையை சுழற்றப்போகும் இரு மாநில போலீசார்.. 

தேனியில் ரேஷன் அரிசி கடத்தும் பெண்கள்.. சாட்டையை சுழற்றப்போகும் இரு மாநில போலீசார்.. 

தேனி

தேனி

Theni - Kerala Border | தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி பெண்கள் மூலம் சிறிய அளவில் கடத்தப்படுவதை தவிர்க்கும் விதமாக, ரேஷன் அரிசி கடத்தும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இலவசமாக விநியோகம் செய்யப்படும் அரிசியை தமிழகத்தின் அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி வழியாக தமிழகத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, கடத்தி செல்லப்பட்டு கேரளப் பகுதியில் விற்கப்பட்டு வருகிறது . தமிழகத்திலிருந்து மொத்தமாக ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பின் மூலம் கனரக வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனால் தற்போது பெண்கள் தலை சுமையாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரேஷன் அரிசி கொண்டு சென்று கேரள மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி மொத்தமாக கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும் ரேஷன் அரிசி பெண்கள் மூலம் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும் தமிழக மற்றும் கேரளா உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது .

மேலும் படிக்க :  ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுப்பிரமணி, தேனி மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி சாந்தி, இடுக்கி ஏடிஎஸ்பி சுனீஷ்பாபு, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி, போடி வட்ட வழங்கல் அதிகாரி ராமராஜ், குமுளி எஸ்ஐ லால்பாய், மனோஜ் மாத்யூ, உடும்பன்சோலை தாசில்தார் ராஜா, பீர்மேடு இணை தாசில்தார் ஜீவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்தப்படுவதை தவிர்க்கும் விதமாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பை தீவிர படுத்தப்பட உள்ளனர் எனவும் , தமிழக கேரளா எல்லை பகுதியான குமுளி, கம்பம் மெட்டு,போடி மெட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட உள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

தலைச் சுமையாக சிறிய அளவில் ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கேரளாவில் தமிழகத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்யும் குடோன்கள் இயங்கும் நிலையில் அந்த குடோன்களை சீல் வைக்கவும் தமிழக மற்றும் கேரள காவல்துறையினர் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

Published by:Arun
First published:

Tags: Local News, Theni