ஹோம் /தேனி /

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கம்பம்

கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் ஆடி வெள்ளி பூஜை

கம்பம் கௌமாரிஅம்மன் திருக்கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கௌமாரிஅம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்தப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கௌமாரியம்மன் திருக்கோயில்

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அம்மன் கோயில்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கௌமாரி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு, சித்திரைத் திருவிழா நடத்துவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாத விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

பக்தர்கள் வெள்ளம்:

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும் போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழு நாட்கள் இந்த விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், ஆடிமாத வெள்ளிக்கிழமையான இன்று மிகவும் விசேஷ நாள் என்பதால், பக்தர்களின் வெள்ளம் அதிக அளவில் இந்தக் கோயிலில் காணப்பட்டது. இன்று ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்ற இந்த விசேஷ நாளில், ஏராளமான பக்தர்கள் கூடியதால் கோவில் திருவிழா கோலம் போல காணப்பட்டது.

அம்மனுக்கு அதிக சக்தி கொண்ட ஆடி மாதத்தில், ஆடி முதல் வெள்ளியில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு பக்தர்கள் வழிபடும் பொழுது, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பக்தர்கள் வேண்டியது உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

மேலும் ஆடி மாதத்தில் பெண்கள் எலுமிச்சையால் ஆன 2 நெய் விளக்குகளை அம்மனுக்கு ஏற்றி, எலுமிச்சையால் அம்மனுக்கு மாலை அணிவித்து, தேங்காய், பூ, பழங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்கின்றனர் கோவில் அர்ச்சகர்கள்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த பிரசாதமான கூல் காய்ச்சி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இன்று பெண் பக்தர்கள் அதிக அளவில் மஞ்சள் சேலை உடுத்தி பொங்கல் வைத்தும், கூல் செய்தும், கோவிலில் விளக்கேற்றியும், தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தியும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபட்டுச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni