Home /theni /

கவுன்சிலர்களை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்.. ஒருமையில் பேசுவதாக குற்றச்சாட்டு - கம்பத்தில் பரபரப்பு

கவுன்சிலர்களை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்.. ஒருமையில் பேசுவதாக குற்றச்சாட்டு - கம்பத்தில் பரபரப்பு

கம்பம்

கம்பம் நகரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Theni District: கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 33 வார்டு கவுன்சிலர்கள் கண்டித்து இன்று வேலையை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் 

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் சுமார் 120  தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களை கம்பம் நகராட்சியின் 33 வார்டு கவுன்சிலர்களும் அரசு விதிகளை மீறி 8 மணி நேரத்திற்குப் பதிலாக கூடுதலாக 12 மணி நேரம் வேலை வாங்குவதாகவும், கவுன்சிலர்களின் உறவினர்கள் வேலை பார்க்கச் சொல்லி மிரட்டுவதாவும் தொடர்ந்து கவுன்சிலர்களின் குடும்பத்தார்கள் தாங்கலை ’வா’ ’போ’ என்று ஒருமையில் பேசி வேலை வாங்குவதாக கூறுகின்றனர்.

    இதனால் இன்று காலை தங்கள் வேலைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், நகர மன்ற கவுன்சிலர்கள் பணி செய்ய விடாமல் மன உளைச்சல் ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் கூறினர்.

    தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் கம்பம் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடந்தன. மேலும் இது குறித்து பலமுறை கம்பம் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று தூய்மைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கம்பம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கம்பம் நகரில் உள்ள 33 வார்டு கவுன்சிலர்களை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர் . இதனால் கம்பம் நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி