முகப்பு /தேனி /

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் கம்பம் ரீச் நிறுவனம்..!

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் கம்பம் ரீச் நிறுவனம்..!

X
தேனி

தேனி

Cumbum Reach Door Delivery : கம்பம் நகரில் கோட்டை கோவில் பக்கத்தில் ரீச் நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் செயல்படும் ரீச் என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

உள்ளூர் சேவை

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விகி, சோமேட்டோ, மளிகை உள்ளிட்ட பொருட்களை ஹோம் டெலிவரி செய்து வரும் செப்டோ, டன்சோ போன்ற நிறுவனங்களை ஓரங்கட்டும் வகையில் உள்ளூரில் சேவையளிக்கும் டெலிவரி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த விஜயகாந்த் என்பவர்.

தனி நபராக ஆரம்பித்தார்

கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த லாக்டவுன் நேரத்தில் தனி நபராக மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தவர் இன்று 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி தனது தொழிலை விரிவாக்கம் செய்திருக்கிறார். விஜயகாந்த் நடத்தி வரும் ரீச் நிறுவனம் இன்று கம்பம் கூடலூர் பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்று பிரபலமடைந்து வருகிறது.

கம்பம் ரீச் நிறுவனம்

A 4to Z சேவை

உள்ளூர் ஓட்டல்களில் சாப்பாடு வாங்கி வருவது, மளிகை பொருட்கள் வாங்கி வருவதுனு மட்டுமில்லாம டீக்கடையில் இருந்து டீ, காபி பார்சல், பூக்கடையில இருந்து பூ, மார்க்கெட்ல இருந்து காய்கறி, பழங்கள், பால் பாக்கெட், மெடிக்கல்ஸில் இருந்து மருந்து மாத்திரைனு எந்த பொருள் தேவைப்பட்டாலும் வாங்கிவந்து உங்களது இருப்பிடத்துலயே கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க : தேக்கடிக்கு படகு சவாரி செய்வதற்காக குவியும் சுற்றுலா பயணிகள்..!   

டெலிவரி பன்றதுக்கு ரீச்சுக்கு ஒரு கால் செய்தால் போதும். அவ்வளவு ஏன் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது உங்களது பைக்கில் பெட்ரோல் Dry ஆகிருச்சுனா அவசரத்துக்கு நண்பர்கள் யாரையும் உதவிக்கு கூப்பிட முடியவில்லை என்றாலும் ரீச்சுக்கு கால் செய்தால் போதும், பெட்ரோல் பங்கில் இருந்து நீங்கள் இருக்கும் இடத்துக்கே பெட்ரோல் கூட வாங்கிட்டு வந்து கொடுத்துருவாங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Cash on Delivery தான்

இதுக்கெல்லாம் நீங்க முன் கூட்டியே காசு கொடுக்கனும்னு கூட தேவையில்லை. நீங்க ஆர்டர் கொடுத்த பொருள் உங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் Cash on delivery ஆக காசை கொடுத்தால் போதும். இந்த சேவைக்கு நீங்க 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் டூ வீலர் மெக்கானிக்கை அழைத்து வருவது, ஏசி மெக்கானிக்கை அழைத்து வருவது, நமக்கு தேவையான எல்லா பணிகளுக்கும் இந்த ரீச்ல தொடர்பு கொள்ளலாம்.

நிஜமான சினிமா கதை

இதெல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு யோசிக்கிறீங்களா, 2011ல வெளிவந்த போராளி என்ற படத்தில் கஞ்சா கருப்பு உட்பட தனது நண்பர்களுடன் சேர்ந்து நம்ம சசிக்குமார் இப்படி ஒரு தொழிலை தான் தொடங்குவாரு. அந்த பட சீன்களை தான் இப்ப நிஜமாக்கியிருக்காரு இந்த விஜயகாந்த்.

எந்தெந்த ஏரியாவில் ரீச் சேவை?

கம்பம் நகரில் கோட்டை கோவில் பக்கத்தில் ரீச் நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் மொபைல் அழைப்புகளை எடுத்து ஆர்டர்களை பெறுவதற்கு தனியாக ஒரு கால் சென்டர் இந்த அலுவலகத்தில் இயங்குகிறது. 10க்கும் மேற்பட்டவர்கள் டெலிவரி செய்வதற்காக பணியமர்த்தப்பட்டிருக்காங்க. கம்பம், கூடலூர், கே.கே.பட்டி போன்ற ஊர்களில் ரீச் சேவை கிடைக்குது.

ஒரு நாளைக்கு எவ்வளவு ஆர்டர்கள்?

நாளொன்றுக்கு 100 முதல் 200 ஆர்டர்கள் வரை வருவதாகவும் டெலிவரி கட்டணமாக 40 ரூபாய் வசூல் செய்வதாகவும் கூறுகிறார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகாந்த். ஆர்டர் கொடுத்த பொருட்கள் 20 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்து டெலிவரி செய்யப்படுகிறது. போதைப் பொருட்கள் மற்றும் மது பானங்கள் தவிர அனைத்து விதமான பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த கடையில் இருந்து ரீச் டோர் டெலிவரி மூலம் வீட்டிலேயே பெற முடியும்.

பொதுமக்களுக்கு வரப்பிரசாதம்

வயதானவர்கள், வீட்டில் தனியாக இருப்பவர்கள், பெண்கள், நடக்க முடியாதவர்கள், உதவிக்கு ஆள் இல்லாதவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ரீச் டோர் டெலிவரி சேவை பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. உள்ளூரில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பெற முடியும் என்பதாலும், உரிய நேரத்தில் வீட்டிலேயே கிடைக்கும் என்பதாலும் இந்த ரீச் சேவைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துகொண்டே உள்ளது.

top videos

    நீங்க கம்பம், கூடலூர், கே.கே.பட்டி பகுதிகளை சேர்ந்தவராக இருந்தா 99947 48539 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரீச் சேவைகளை பெறலாம்.

    First published:

    Tags: Local News, Theni