முகப்பு /தேனி /

கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..

கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..

X
தேனி

தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்

Cumbum Head Constable : தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் காவல்துறையில் பணியில் சேர்ந்த போதும் விளையாட்டுத்துறையில் தனக்கு இருக்கும் ஆர்வத்தால் காவல் பணியில் இருக்கும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய மாரியப்பன் பல்வேறு போட்டிகளில் 3ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இவரது இந்த முயற்சியை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர். தொடர்ந்து, தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாரியப்பன் கடுமையாக பயிற்சி செய்து வந்தார். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக போக்குவரத்து செலவிற்காக நிதி உதவி தேவைப்படும் நிலையில் கம்பம் எம்எல்ஏவிடம் நிதி உதவி பெற்றார்.

தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்

இதையும் படிங்க : கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..! இந்த வழியை பயன்படுத்துங்க..!

விளையாட்டு துறையில் சாதித்து தமிழ்நாடு காவல்துறைக்கும் தேனி மாவட்ட காவல்துறைக்கும் பெருமை சேர்க்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் மாரியப்பனுக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தின் சார்பாக முப்பது ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து இருந்தார்.

தேசிய அளவிலான போட்டி 

தற்போது ஆசிய பசுபிக் மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் உள்ள Jeonbuk பகுதியில் மே 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் மாரியப்பன் ஈட்டி எறிதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் பிரிவுகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தென்கொரியாவிற்கு சென்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தனக்கு நிதி உதவி அளித்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் இதர திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, Theni