முகப்பு /தேனி /

தேனியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி.. அசத்திய குட்டீஸ்!

தேனியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி.. அசத்திய குட்டீஸ்!

X
வனத்துறை

வனத்துறை சார்பில் விழிப்புணர்வு 

Cumbum drawing competition | உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேனி வனக்கோட்டம் வனத்துறையினர் சார்பில் கம்பம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

  • Last Updated :
  • Kambam (Cumbum), India

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்ப்பது குறித்தும் , வனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது .

நெகிழி மாசுபாட்டிற்கு மாற்று என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் மே 13ஆம் தேதி முதல் ஜூன் ஐந்தாம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் தேனி வனக்கோட்டம் கம்பம் வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. கம்பம் வனத்துறையினர் மற்றும் நூல் ஓவிய பயிற்சி பள்ளி இணைந்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வனப் பாதுகாப்பு பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வனக்காப்பாளர் பாலாஜி , வனவர் ஜெய் சிங், வனக்காப்பாளர் ஹேமலதா, கம்பம் மேற்கு வனக்குழுவினரும் கம்பம் நூல் ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியர் சித்தேந்திரன் ஆங்கில ஆசிரியர் பிரபு ஆகியோர்கள் கலந்து கொண்டு

மாணவ மாணவியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்கள்.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து கம்பம் வனத்துறை மூத்த அதிகாரி ஜெய் சிங் சிறப்புரையாற்றினார். இந்த ஓவியப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஓவியப்போட்டிக்குப் பின்னர் கம்பம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்தல் மற்றும் பாலித்தீன் பைகள் அகற்றுதல் களப்பணியை வனத்துறையினர் மற்றும் நூல் ஓவிய பயிற்சி பள்ளியினர் பொதுமக்களுடன் இணைந்து செய்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Cumbum, Local News, Painting, Theni