ஹோம் /தேனி /

பட்டத்து காளையை வழிபட கம்பம் நந்தகோபாலசுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பட்டத்து காளையை வழிபட கம்பம் நந்தகோபாலசுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

X
தேனி

தேனி கோவில் வழிபாடு

Cumbum NandhaGopala Swamy Temple | கம்பத்திலுள்ள தம்பிரான் நந்தகோபலன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தம்பிரான் மாட்டு தொழுவம் நந்தகோபாலன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று காளை மற்றும் தொழும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்துவருகிறது.

பொங்கல் வழிபாடு

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள நந்தகோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் திருவிழா கோலகாலமாக நடைபெறும். இந்த கோயிலில் உள்ள எண்ணற்ற மாடுகளை பொதுமக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப்பொங்கல் திருவிழா அன்று கோயிலில் உள்ள பட்டத்து காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

பசு மாடுகளை வழிபடும் மக்கள் 

அந்த வகையில் இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் திருநாள் அன்று கம்பம் தம்பிரான் மாட்டுத் தொழுவம் நந்தகோபாலன் சுவாமி கோயிலில் தொழுவம் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

பசு மாடுகளை வழிபட்ட மக்கள்

கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் புத்தாடை அணிந்து செங்கரும்புடன் ஊர்வலமாக வந்து புத்தரிசி பொங்கலிட்டு வழிபட்டனர்.

பசுமாடுகளை வழிபட்ட மக்கள்

இக்கோயிலில் விக்கிரகங்கள் ஏதும் இல்லாததால் பாரம்பரியமாக இங்கு வளர்க்கப்படும் மாடுகளை பொதுமக்கள் கடவுளாக வழிபடுகின்றனர்.

பென்னிகுவிக்கின் 182 ஆவது பிறந்தநாள் - தேனியிலுள்ள நினைவு மண்டபத்தில் குவிந்த மக்கள்

மாட்டுப் பொங்கல் திருநாள் அன்று கோயிலில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் பக்தர்கள் படை சூழ திருவிழா போல காட்சி அளித்தது.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni