ஹோம் /தேனி /

கொலை செய்யப்பட்ட கம்பம் வாலிபரின் உடல் 10 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு..

கொலை செய்யப்பட்ட கம்பம் வாலிபரின் உடல் 10 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு..

தேனி

தேனி : கொலை செய்யப்பட்ட கம்பம் வாலிபர் உடல் கிடைத்தது

Theni District Crime News | தேனி மாவட்டம் கம்பம் நகரில் 10 நாட்களுக்கு முன்பு கொலை செய்து ஆற்றில் வீசிய வாலிபரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கூலத்தேவர் முக்கு தெருவை சேர்ந்தவர் 37 வயதாகும் பிரகாஷ். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என கடந்த 10 நாட்களுக்கு முன் பிரகாஷின்  மனைவி கனிமொழி, கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கொலையாளிகளை கண்டறிந்தனர்.

கொலையாளிகள் யார்?

அதே தெருவில் வசித்து வரும் 34 வயதாகும் ஆட்டோ டிரைவர் வினோத் குமார் மற்றும் அவரது மனைவி நித்யா (25) இருவரும் சேர்ந்து பிரகாஷின் தகாத உறவு காரணமாக பிரகாஷின் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

கொலை செய்யப்பட்ட பிரகாஷின் உடலை ஆட்டோவில் தூக்கிச் செல்ல வினோத் குமாரின் நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பவரை அழைத்து வந்து, மூவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கம்பம் அடுத்த உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் ஆற்றுப் பாலம் பகுதியில் வீசியது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பிரகாஷ்

அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் பிரகாஷின் உடலை முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

10 நாட்களாகியும் ஆற்றுப்பகுதியில் பிரகாஷின் உடல் கிடைக்காததால்  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்திவிட்டு

முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தீவிரமாக தேடியதில் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்று பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பது தெரியவந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடனடியாக அவரது மனைவி கனிமொழியை அழைத்து பிரகாஷின் உடலை, அவர் கையில் அணிந்திருந்த செம்பு காப்பு மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Published by:Arun
First published:

Tags: Crime News, Cumbum, Local News, Theni