ஹோம் /தேனி /

தெரு விளக்குகளை LED பல்புகளாக மாற்றும் முயற்சியில் கம்பம் நகராட்சி..

தெரு விளக்குகளை LED பல்புகளாக மாற்றும் முயற்சியில் கம்பம் நகராட்சி..

கம்பம் நகராட்சி

கம்பம் நகராட்சி

Cumbum Municipality | கம்பம் நகராட்சியில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை, எல்.இ.டி (LED) பல்புகளாக மாற்றும் முயற்சியில் கம்பம் நகராட்சி நிர்வாகம் இறங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் 2வது பெரிய நகராட்சியாக விளங்கும் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கம்பம் நகராட்சியில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கம்பம் நகராட்சியில் உள்ள தெரு விளக்குகளை LED விளக்குகளாக மாற்றும் முயற்சியில் நிர்வாகம் இறங்கி உள்ளது.

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் விதமாக , அதிக மணி நேரங்கள் எரியும் திறன் கொண்ட எல்இடி பல்புகளை தெரு விளக்குகளாக பயன்படுத்தும் முயற்சியில் நிர்வாகம் பணியாற்றி வருகிறது.

தற்போது கம்பம் நகராட்சியில் மொத்தம் 2,660 தெருவிளக்குகள் உள்ளது. இந்த அனைத்து விளக்குகளும் எல்இடி பல்புகளாக மாற்றப்பட உள்ளது. இதுவரை சுமார் 843 பல்புகள் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1817 தெரு விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றப்பட உள்ளது.

மேலும் படிக்க: கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற மாநில அரசின் நகர்ப்புற நிதி, அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் 5 சதவீத வட்டியுடன் 6 ஆண்டுகள் தவணை நாட்கள் கொண்ட ரூ.201 லட்சம் தொகையை கடனாக வழங்குகிறது. இதற்கு அனுமதி கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் எல் இ டி பல்புகளாக மாற்றும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல் இ டி பல்புகள் மூலம் மின் சிக்கனம் ஏற்பட்டு நகராட்சியின் மின்சார செலவு குறையும் எனவும், led பல்புகள் ஒன்று 50,000 மணி நேரம் எரியும் திறன் கொண்டதாகவும் இருப்பதால் நகராட்சிக்கு பராமரிப்பு செலவு குறையும் எனவும், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விளக்குகள் ஒரு விளக்கு 5,000 மணி நேரம் மட்டுமே எரியும் . இதனால் led பல்புகள் பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பல்வேறு நன்மைகள் உள்ளதால் இதனை செயல்படுத்த உள்ளோம் என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni