Home /theni /

குப்பைகள் இல்லாத பளிச் வார்டு.. ஆங்காங்கே செடி கொடிகள்.. ஓடோடிச் சென்று மக்கள் பணி.. அசத்தும் கம்பம் கவுன்சிலர்...

குப்பைகள் இல்லாத பளிச் வார்டு.. ஆங்காங்கே செடி கொடிகள்.. ஓடோடிச் சென்று மக்கள் பணி.. அசத்தும் கம்பம் கவுன்சிலர்...

அசத்தும்

அசத்தும் கம்பம் கவுன்சிலர்...

Theni Cumbum Municipality | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 11வது வார்டு கவுன்சிலரான சாதிக் தன்னுடைய கள பணிகளால் பொதுமக்களிடையே பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியின் 11-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு சமூக ஆர்வலரான சாதிக் வெற்றி பெற்று கவுன்சிலராகி உள்ளார்.   இந்தவார்டில் பதிவான 1,579 வாக்குகளில் சாதிக் 1306 வாக்குகள் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றவர் சாதிக்.

ஏற்கனவே சமூக ஆர்வலராக திகழ்ந்து வரும் சாதிக், பொதுமக்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்ததால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நகர்மன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு , 11வது வார்டு  மக்களுக்கு தேவையான சாக்கடை,  குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார் . தன்னுடைய வார்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினசரி வார்டு பகுதியை சுத்தப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறார்.

கம்பம் நகரில் அசத்தும் கவுன்சிலர்...


குப்பை கொட்டும் இடங்களில் செடி கொடிகள்:

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுமக்கள் குப்பை கொட்டாதவாறு பச்சை தார்ப்பாய் கட்டி அங்கு செடி நட்டு அசத்தியுள்ளார். அதனை தொடர்ந்து செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து குப்பை கொட்டும் இடங்களை பசுமை சோலையாக மாற்றி உள்ளார். பொதுமக்கள் அதிலிருந்து மிளகாய் தக்காளி உள்ளிட்டவற்றை பறித்துச்சென்று சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கம்பம் நகரில் அசத்தும் கவுன்சிலர்...


அறிவிப்பு பலகையில் புகார் எண்:

வார்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனே தெரிவிக்கும்  விதமாக வார்டு பகுதி முழுவதும் புகார் எண் அடங்கிய அறிவிப்பு பலகை ஓட்டியுள்ளார். தொடர்ந்து மக்களுக்கான பணிகளை உடனடியாக செய்து வருவதால் , பொதுமக்களிடம் பெரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் .

கம்பம் நகரில் அசத்தும் கவுன்சிலர்...


இதுகுறித்து 11 வது வார்டு நகர்மன்ற உறுப்பினரான சாதிக் கூறுகையில்,  " தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் குறிக்கோளாக உள்ளேன். என்னுடைய வார்டை சுத்தமான, சுகாதாரமான வார்டாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

கம்பம் நகரில் அசத்தும் கவுன்சிலர்...


பொதுமக்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு மூலமே அனைத்தும் சாத்தியமாகிறது. தொடர்ந்து மக்கள் ஆதரவளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சிறந்த வார்டாக மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது  " என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி