ஹோம் /தேனி /

விண்வெளி செல்ல நிதி உதவிக்காக காத்திருக்கும் தேனி மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கம்பம் எம்எல்ஏ..

விண்வெளி செல்ல நிதி உதவிக்காக காத்திருக்கும் தேனி மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கம்பம் எம்எல்ஏ..

X
கம்பம்

கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனுடன் உதய கீர்த்திகா

Cumbum MLA Ramakrishnan | விண்வெளிக்கு செல்வதற்காக கனவுகளுடன் காத்திருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் உதவியுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

இந்தியாவின் ககன்யான் திட்டத்தில், விண்வெளிக்கு செல்லும் கனவுடன் பயணிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் உதய கீர்த்திகா, மேல் படிப்பு படிப்பதற்கு நிதி உதவி தேவைப்படும் நிலையில் முதற்கட்டமாக கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தன் சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

விண்வெளி கனவு

தேனி மாவட்டம் தேனி அல்லி நகரம் பகுதியைச் சார்ந்தவர் உதய கீர்த்திகா. மிகுந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் மத்திய அரசின் ககன்யான் திட்டத்தில் சேர்ந்து, இந்தியாவுக்காக விண்வெளிக்கு செல்லும் கனவுடன் அதற்கான பயிற்சிகளை முடித்துள்ளார்.

இவர் பிளஸ் 2 முடித்த பின் உக்ரைன் நாட்டில் உள்ள காக்யூ நேசனல் ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் க்ராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் என்கிற வின்வெளி பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.அதே பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு தேர்வில் 92.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார்.

மேலும் படிக்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்..

அதற்கு பின்பு போலாந்து நாட்டிற்கு சென்று அனலாக் அஸ்ட்ரோனெட் ட்ரெய்னிங் செண்டரில் வின்வெளி வீரர்களுக்கான 10 வகையான பயிற்சிகள் மேற்கொண்டார். காற்று மண்டலத்தில் மிதத்தல் ,கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நீந்துதல் விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ராக்கெட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட 10 வகையானபயிற்சிகளை முடித்து விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் இப்பயிற்சிகளை முடித்துள்ள ஒரே பெண்மணி தேனி மாவட்டத்தை சேர்ந்த உதயகீர்த்திகா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பள்ளி படிப்பு படிக்கும் பொழுது இரண்டு முறை இஸ்ரோ நடத்திய ஆய்வுக் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று இஸ்ரோவிடம் இருந்து இரண்டு முறை முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார்.

விண்வெளி வீரர் ஆவதற்கு முக்கிய பயிற்சியாக கருதப்படும் பைலட் பயிற்சியை டெல்லியில் படித்து DGCA எழுத்து தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார் .

மேலும் படிக்க :  தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

நிதி உதவி

விண்வெளி வீரர் ஆக வேண்டும், விண்வெளி சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் உதய கீர்த்திகா, செயல்முறை பைலட் பயிற்சியை பெறுவதற்கு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மேக் ஒன் ஏவியேசன் அகடாமி என்ற பைலட் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற இடம் கிடைத்திருக்கும் நிலையில் அந்த பயிற்சிக்கு செல்ல போதிய நிதி உதவி இல்லாமல் தவித்து வந்தார் . பயிற்சிக்கு செல்ல நிதி உதவியை நாடி காத்திருந்தார் உதய கீர்த்திகா.

மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ:

இப்பயிற்சிக்கு செல்ல பல லட்சங்கள் தேவைப்படும் நிலையில் முதற்கட்டமாக தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு , தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக உதய கீர்த்திகாவிற்கு அளித்துள்ளார் .

கம்பம் எம்எல்ஏ உதவிக்கரம்

இந்தியாவிற்கு பெருமை சேர்க்க உள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஆக உருவாக உள்ள உதய கீர்த்திகாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மேலும் நிதி உதவி தேவைப்படும் நிலையில் , உதய கீர்த்திகா குறித்து முதலமைச்சரிடம் பேசுவதாகவும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

நிதி உதவி கிடைத்த பின்பு பைலட் பயிற்சியை நன்றாக படித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் உதயகிருத்திகாவிற்கு வாழ்த்துக்களுடன் சில அறிவுரைகளையும் கூறினார் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன்.

மேலும் படிக்க :   காதல் திருமணம் செய்து 23 வயதில் இரண்டு கைக்குழந்தைகள்... கணவரை இழந்து அரசின் உதவியை நாடும் தேனி மாவட்ட இளம் பெண்... 

இதுகுறித்து உதய கீர்த்திகா கூறுகையில், ‘பைலட் பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துள்ளது. அங்கு செல்ல ரூ 50 லட்சம் வரை தேவைப்படும். இவ்வளவு பணத்தை புரட்ட முடியாத நிலையில் உள்ளேன். தற்போது கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் புதிய உதவி அளித்துள்ளார் . விண்வெளியில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வது, விண்வெளியில் எவ்வாறு தரையிறங்குவது, எந்த இடத்தில் தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்க தேர்வு செய்வது, விண்வெளியில் இருக்கும் சமயங்களில் உடல்நிலையை எவ்வாறு சீராக வைத்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் கனடாவிலுள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பயிற்சி மேற்கொள்ள எனக்கு நிதி உதவி தொடர்ந்து தேவைப்படுகிறது . எனக்கு போதிய நிதி உதவி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்மணியாக இருந்து தேனி மாவட்டத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என கூறினார்.

First published:

Tags: Local News, Theni