முகப்பு /தேனி /

கம்பம் கண்ணுடையார் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..  

கம்பம் கண்ணுடையார் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..  

X
கும்பாபிஷேக

கும்பாபிஷேக விழா 

Kannudaiyar Swami Temple | கம்பம் நகரில் உள்ள ஸ்ரீகண்ணுடையார் சுவாமி மற்றும் திருமாயம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீகண்ணுடையார் சுவாமி, ஸ்ரீதிருமாயம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை போன்ற பூஜைகளை நடத்தி ஸ்ரீகண்ணுடையார் சுவாமி மற்றும் திருமாயம்மன் திருக்கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் தவத்திரு பொன்னம்பல அடிகளார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சுவாமி அபிஷேகம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி மற்றும் தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni