ஹோம் /தேனி /

பறை இசை.. சிலம்பம்.. கம்பத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சுதந்திர தின விழா பேரணி..

பறை இசை.. சிலம்பம்.. கம்பத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சுதந்திர தின விழா பேரணி..

கம்பம்,

கம்பம், சுதந்திர தின விழா

75th Independance Day : தேனி மாவட்டம் கம்பம் நகரில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் பாரதி இலக்கிய பேரவை சார்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாரதி இலக்கிய பேரவை சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமை படுத்தும் விதமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காகவும் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று பள்ளி மாணவ மாணவிகள், கம்பம் பகுதியில் உள்ள சமூக சேவையில் ஆர்வம் உள்ள நபர்கள் , எழுத்தாளர்கள், தமிழ் பற்றாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என அனைவரும் இணைந்து ஊர்வலமாக செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வேடம் அணிந்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசையை இசைத்தும், நடனம் ஆடியும் ஊர்வலமாக சென்றனர்.

அதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதி இலக்கியப் பேரவை சார்பாக 75வது சுதந்திர தின ஐம்பெரும் விழா நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் கரகாட்டம், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர்களின் உருவப்படங்கள் உட்பட முக்கிய தலைவர்களின் உருவப்படங்களும் திறக்கப்பட்டது . சிறந்த நூல்களுக்கான விருதும் வழங்கப்பட்டு, சிறந்த எழுத்தாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து, கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளின் பாராட்டி சென்றனர்

Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Theni