ஹோம் /தேனி /

கம்பத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி

கம்பத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி

தேனி

தேனி மனித சங்கிலி

Theni District | தேனி மாவட்டம் கம்பம் நகரில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலிப் பேரணியை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி பேரணியை நடத்தினர் .

மனித சங்கிலி பேரணி :

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து மணி சங்கிலி பேரணி நடத்தியது.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள காந்தி சிலை முதல் சிக்னல் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பாசிசத்தை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி நடத்தியது.

இதையும் படிங்க : தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

இந்த மனித சங்கிலியில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரு கைகளை பிடித்தவாறு மத நல்லிணக்கம் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் நல்லிணக்கம் தொடர்பாக தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மனித சங்கிலி பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni