Home /theni /

கம்பம் கள்ளழகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா - ஏராளமானோர் பங்கேற்பு

கம்பம் கள்ளழகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா - ஏராளமானோர் பங்கேற்பு

கம்பம் கள்ளழகர் திருக்கோவில்

கம்பம் கள்ளழகர் திருக்கோவில்

Cumbum Kallazhagar Temple | தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்மிகு நூதன ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் திருக்கோவிலில் நூதன மூர்த்திகளுக்கும் பதிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் கம்பம் நகரில்,  குலாளர் சமூக கோட தலையாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு நூதன ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (செப் 13) நடைபெற்றது. பகவத் அனுக்ஞை, எஜமான சங்கல்பம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், அங்கூரர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள், ஸ்ரீ வாசுதேவ புண்யகவாசனம், கும்ப ஸ்தாபனம், சதுஷ்டானம், அர்ச்சனை கலச ஸ்தூபி பிரதிஷ்டை, முதல் கால ஹோமம், முதல் காலபூர்ணாகுதி இரண்டாம் கால பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று கோயிலில் மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடத்தப்பட்டு யாத்திரதானம் புறப்பாடு நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கள்ளழகர் பெருமாள் விமானத்திற்கும் ஸ்ரீ நல்லம்மாள் விமானத்திற்கும் திருக்குடன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வையொட்டி கும்பத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:  பாட்டையா கோவிலும் காமய கவுண்டன்பட்டி வரலாறும்! - யார் இந்த காமய கவுண்டர்?

தொடர்ச்சியாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கள்ளழகர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் வளாகத்தில் விழா கமிட்டியினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி