முகப்பு /தேனி /

கம்பம் சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்..

கம்பம் சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்..

X
கம்பம்

கம்பம் சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்

Theni News | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் இலவச நான்கு சக்கர தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத்திய அரசின் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜனா, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டம் சார்பில் கம்பம் பகுதியில் சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசின் சார்பில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் தகுதியான சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்பம் பகுதியில் சிறு வியாபாரம் செய்து வரும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பற நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்த நபர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து கம்பம் பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச 4 சக்கர தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

கம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு வியாபாரிகள் 90 நபருக்கு தள்ளு வண்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. விழாவின் துவக்க நாளில் கம்பம் பகுதியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இதர நபர்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக நகரமன்ற தலைவர் கூறியுள்ளார்

First published:

Tags: Local News, Theni