ஹோம் /தேனி /

கம்பத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் தீ விபத்து  

கம்பத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் தீ விபத்து  

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் குப்பை கிடங்கில் தீ விபத்து

Theni District News | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை வைக்கக்கூடிய கிடங்கில் எதிர்பாரா விதமாக தீ விபத்து ஏற்பட்டதில் பிளாஸ்டிக் குப்பைகள் எரிந்து நாசம் அடைந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு கம்பம் வாரச்சந்தை அருகில் உள்ள RRC மையத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது.

அங்கிருந்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கம்பம் நகராட்சி சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு ஒரே கட்டிடத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு குப்பைகள் சேகரித்து வைக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின் கசிவு காரணத்தினால் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் கிடங்கின் மூன்றாவது வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் தெரியுமா? - வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

விரைந்து வந்த தீயணைப்பு துறையினரின் சீரிய முயற்சியால் வளம் மீட்பு மையத்தில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு என்பதால் பொருள் சேதம் ஏற்படவில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni