ஹோம் /தேனி /

இந்தி திணிப்பை எதிர்த்து கம்பம் நகரில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 

இந்தி திணிப்பை எதிர்த்து கம்பம் நகரில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 

 திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 

திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 

Theni District News | இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிட கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழகத்தில் பல்வேறு வழிகளில் இந்தி திணிப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கிரசன்ட் தியேட்டர் அருகில் திராவிட கழக இளைஞரணி மற்றும் திராவிட கழக மாணவரணி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழி என்பதன் அடிப்படையிலும் , அரசு பணிகளுக்காண தேர்வில் ஆங்கிலத்தை தவிர்த்து இந்தி மொழிக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த திராவிட கழக இளைஞர் அணி மற்றும் திராவிட கழக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், “இந்தி மொழியை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். ஒருவன் தனது தாய்மொழியில் கல்வி கற்கும்பொழுது தான் முழுமையான அறிவை பெற முடியும். பல்வேறு வகைகளில் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்படுவதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என்றனர்.

இதையும் படிங்க : குமுளியில் இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் மக்கள் அவதி

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையிலும், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni