ஹோம் /தேனி /

மாட்டு வண்டி பந்தயத்துடன் களைகட்டிய கம்பம் மந்தையம்மன் கோவில் திருவிழா

மாட்டு வண்டி பந்தயத்துடன் களைகட்டிய கம்பம் மந்தையம்மன் கோவில் திருவிழா

மந்தையம்மன்

மந்தையம்மன் கோவில் மாட்டு வண்டி பந்தயம்

Cumbum Manthaimamman Temple Festival 2022 | கம்பம் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கம்பம்மெட்டு சாலையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கம்பம் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கம்பம்மெட்டு சாலையில் நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயம் :

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கம்பம் மெட்டு சாலையில் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பந்தையம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் நகர மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் தெற்கு நகர செயலாளர் சூர்யா செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Cumbum, Local News, Theni