ஹோம் /தேனி /

பசுமை சோலையாக மாறப்போகும் கம்பம் நகர்... கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்...

பசுமை சோலையாக மாறப்போகும் கம்பம் நகர்... கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்...

கிராம சபை

கிராம சபை

Theni | தேனி மாவட்டம் கம்பம் நகரில் முதல் நகர சபை கூட்டம் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் கம்பம் நகரை பசுமை சுவையாக மாற்று உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நகர் சபை கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் முதல் நகர சபை கூட்டம் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. கம்பம் நகரை பசுமை சோலையாக மாற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நவம்பர் 1 -உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகர மற்றும் கிராமங்களில் கிராம சபை மற்றும் நகர சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் முதன்முதலாக முதல் நகர சபை கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக பூர்த்தி செய்யும் கிராம சபை கூட்டம் தமிழகத்தில் வரவேற்பு பெற்ற நிலையில் நகரங்களிலும் பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் பொருட்டு நகர சபை கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

கிராம சபை கூட்டத்தில் கிராமப்புற பொதுமக்கள் தங்களது உள்ளூர் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடம் நேரடியாக பேசி தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக கிராம சபை கூட்டம் அமைவதால் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்திற்கு வரவேற்பு அளித்த வந்தனர்.

இதையும் படிங்க : எங்கு காணினும் மஞ்சள்.. கம்பம் பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா (புகைப்படங்கள்)

அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற பொதுமக்களும் தங்கள் குறைகளை நேரடியாக அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிவிக்கும் விதமாக நகர சபை கூட்டம் தமிழக முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது. கம்பம் நகராட்சி பகுதியில் முதல் முதலாக கம்பம் நகராட்சி 3-வது வார்டு பகுதி குழு கூட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹால் அருகில் கம்பம் 3-வது வார்டு குழு மற்றும் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையிலும்வார்டு குழு உறுப்பினர்கள் ஒ.கருத்தக்கண்ணன், சொ.சந்திரன் , ச.த. முருகன், மு.பாண்டியராஜன் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

பசுமை சோலையாக கம்பம் நகர் :

கூட்டத்தில் வார்டு குழு பற்றி விளக்கியும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததும், கம்பம் பகுதி 3வது வார்டு மற்றும் கம்பம் நகர் பகுதி முழுவதும் பி த சேஞ்ச் என்ற தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து சுமார் 3000 மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரித்து கம்பம் நகர் பகுதியில் பசுமை சோலையாக மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க : தெரு விளக்குகளை LED பல்புகளாக மாற்றும் முயற்சியில் கம்பம் நகராட்சி..

வார்டு 3 மற்றும் கம்பம் பகுதி முழுவதும் தெருக்களில் குப்பை இல்லாத நகராட்சியாகயும், குப்பை இல்லாத வார்டாகவும் கம்பம் நகராட்சியை மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் , கம்பம் நகராட்சி மூணாவது வார்டு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த முழு விவரப்பட்டியலை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் தீர்மானம் உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றியும், பொதுமக்களிடம் குறைகள் கேட்டும் மனுவாகவும் பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கம்பம் நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் துரைநெப்போலியன், நகராட்சி ஆணையர், பொறியாளர்,மற்றும் நிர்வாகிகளும், ஊழியர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni