ஹோம் /தேனி /

கம்பராய பெருமாள் கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை.. பக்தர்கள் பரவசம்!

கம்பராய பெருமாள் கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை.. பக்தர்கள் பரவசம்!

X
சொக்கப்பனைதீபம்  

சொக்கப்பனைதீபம்  

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், கோவிலில் தீபம் ஏற்றியின் வழிபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கம்பத்தில் அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோயிலில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

கார்த்திகை திருவிழா :-

கம்பம் நகரில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை மக்கள் கண்டு களித்து சிவபெருமானை வழிபட்டனர். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி தினமும் சேர்ந்து வரக்கூடிய நாள், திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு

கார்த்திகை தீத்திருநாள் இன்று தமிழகம் எங்கும் வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது .

இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைப்போலவே தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலில் இன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , கோவில் வளாகத்தில் சொக்கப்பனை என்ற மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த கோவிலில் பல விசேஷ நிகழ்வுகள் நடைபெற்றாலும் இந்த கார்த்திகை மாத மகாதீபத்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில், இன்று கார்த்திகை தீபத்திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர்.

மேலும், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், கோவிலில் தீபம் ஏற்றப்பட்ட பின்பு வீடுகளில் விளக்கேற்றியும் விரதம்விட்டும் கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Cumbum, Deepam festival, Local News, Theni