தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் புத்தகக் கண்காட்சி விற்பனை திருவிழா நடைபெற்றது. கம்பம் சிக்னல் அருகே புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் சார்ந்த புத்தகங்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளைக் கவரும் புத்தகம், ஆங்கில புத்தகம் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன
குழந்தைகளுக்கான கதைகள், அறிவியல் கதைகள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், மருத்துவ நூல்கள், உலகை உலுக்கிய வரலாற்று நூல்கள், காவியங்கள், தேர்வு வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள், கவிதைகள், புதினங்கள், சிறுகதைகள், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய நூல்கள், மாற்று அரசியல் நூல்கள் உள்ளிட்ட நூல்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு சுந்தர் தலைமையிலும், தமுஎகச மாவட்ட செயலாளர் தமிழ்மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் மற்றும் ஸ்ரீராமன் முன்னிலையிலும் இந்த புத்தக கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் வரவேற்புரையாற்றினார் . புத்தக விற்பனை திருவிழாவை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் துரைநெப்போலியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கும் மதிப்பிலான புத்தகங்கள் விற்கப்பட்டது.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.