ஹோம் /தேனி /

Theni News : ஆடி அமாவாசை.. பக்தர்களின் வெள்ளத்தில் சுருளி அருவி 

Theni News : ஆடி அமாவாசை.. பக்தர்களின் வெள்ளத்தில் சுருளி அருவி 

தேனி

தேனி - சுருளி அருவி

Theni Latest News : ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் சுருளி அருவியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரள பகுதியிலிருந்தும் ஏராளமானோர் சுற்றுலாவுக்காகவும், சுருளி ஆண்டவர் கோவிலில் வழிபாடு நடத்தி புனிதநீர் எடுத்துச் செல்வதற்காகவும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை நடத்திடவும் ஏராளமானோர் நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தைமாதம் மற்றும் ஆடிமாதம் அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்துவிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோவிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தியதுடன் அங்குள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni