ஹோம் /தேனி /

அடுப்பு, நெருப்பு, எண்ணெய் இல்லாமல் 2,200 வகையான உணவு தயாரிக்கலாம் - அசத்தும் தேனி கேட்டரிங் குழுவினர்  

அடுப்பு, நெருப்பு, எண்ணெய் இல்லாமல் 2,200 வகையான உணவு தயாரிக்கலாம் - அசத்தும் தேனி கேட்டரிங் குழுவினர்  

கேட்டரிங்

கேட்டரிங் குழ

Theni News | தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில், அடுப்பு, எண்ணெய் நெருப்பு எதுவும் இன்றி சமையல் செய்து அசத்தியுள்ளனர் படையல் கேட்டரிங் குழுவினர். இதெப்படி சாத்தியம்? வாங்க எப்படினு பார்க்கலாம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதற்கு நெடுதூரம் பயணம் செய்து உணவகங்களுக்கு சென்று சாப்பிட்ட காலம் மாறி, தற்பொழுது யூடியூப் , பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு பல்வேறு வகைகளில் ருசியான உணவு தயாரிக்கும் வீடியோக்களை பார்த்து வீட்டில் உள்ள பெண்கள் விதவிதமாக சமைப்பது உண்டு . எந்த ஒரு சமையல் குறித்த காணொளியிலும் அல்லது சமையல் தொடங்கும் பொழுதும்  அடுப்பில் பாத்திரத்தை வைத்து அடுப்பை பற்ற வைக்க வேண்டும் என்பார்கள்..

சமையல் செய்வதற்கு பிரதானமாக நெருப்பும், அடுப்பும் உள்ளது. ஆனால் அடுப்பை பற்ற வைக்காமலே ஒன்றல்ல, இரண்டல்ல 2,000க்கும் மேற்பட்ட வகையான உணவுகளை தயாரித்து பரிமாறுகிறோம் என்று கூறி வியக்க வைக்கின்றனர் கோவை மாவட்டத்தை பூர்வீமாகக் கொண்ட  ‘படையல்’ கேட்டரிங் குழுவினர்.

இது எப்படி சாத்தியம் ?

" அடுப்பு இல்லாமல் சமைக்கலாம் வாங்க " - நோ ஆயில் நோ பாயில் என்பதன் அடிப்படையில் அடுப்பு, எண்ணெய், எந்த ஒரு ரசாயன பொருளும் இல்லாமல் இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி, வடை சாப்பாடு, புட்டு, பணியாரம், செம்பருத்தி பூ ஜூஸ் ஆவாரம் பூ ஜூஸ் உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களை சுவையுடனும் ஆரோக்கியத்துடனும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பக்கூடிய வகையில் சமைத்து அசத்துகின்றனர்.

மேலும் படிக்க : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

கடந்த 15 வருடங்களாக அடுப்பில்லாமல் சமைப்பது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தற்போது 2000க்கும் மேற்பட்ட வகையான உணவுப் பொருட்களை சமைப்பதில் வல்லுனராக திகழ்கின்றனர் படையல் கேட்டரிங் குழுவினர்.

மேலும் அடுப்பு இல்லாமல் சமையல் செய்வது தொடர்பாக பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர். தற்போது முதல் கட்டமாக அடுப்பு இல்லாமல் உணவு தயாரிக்கும் உணவகத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர் அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதிலும் தனது கிளைகளை பரப்ப முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க :  கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா! 

இவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்திலும் நடைபெறும் வீட்டு விசேஷ நிகழ்வுகளில் அடுப்பில்லாமல் உணவு தயாரித்து கேட்டரிங் செய்து வருகின்றனர்.

பயிற்சி வகுப்பு :-

அந்த வகையில் தற்போது தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் அடுப்பில்லாமல் சமைக்கும் முறையில் மாப்பிள்ளை சம்பா , தூயமல்லி வரகு ராகி சாமை , பாரம்பரிய அரிசி வகைகள் காய்கறிகள், பாரம்பரிய சிறுதானியங்களை கொண்டு கருப்பு கவுனி கொழுக்கட்டை , தூய மல்லி வெண்பொங்கல், ராகி உப்புமா, வரகு கிச்சடி, பாதாம் பிசின் பாயாசம், வாழைப்பூ வடை , நரிப்பயர், கொழுக்கட்டை செம்பருத்தி பூ பாயாசம் இளநீர் பாயாசம் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை தயாரித்து கேட்டரிங் செய்துள்ளனர். இந்த அனைத்து உணவுப் பொருட்களையும் அடுப்பு நெருப்பு இல்லாமல் உணவு தயார் செய்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் விசேஷ நிகழ்வில் உணவு பரிமாறியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இதுகுறித்து படையில் கேட்டரிங் உரிமையாளரான சிவா கூறுகையில், " முதன் முதலில் கோவை மாவட்டத்தில் சிறிய அளவில் அடுப்பு இல்லாமல் உணவு சமைத்து கொடுத்தோம். தொடக்கத்தில் பல கேலிகளையும் கிண்டல்களையும் சந்தித்தோம்.  ஆனால் எங்களது நோக்கம் பொதுமக்கள் ஆரோக்கியமான மற்றும் தரமான உணவை உண்ண வேண்டும் என்பதாகும். தற்போது ஆயில் மற்றும் சுவை தரக்கூடிய ரசாயன பொருட்கள் மூலம் உணவு தயாரித்து பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது அது சுவையாக இருந்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

இதற்காக கோவை மாவட்டத்தில் மட்டும் அடுப்பு இல்லாமல் உணவு சமைத்து கேட்டரிங் பணியை செய்து வந்தோம். அதில் உணவு உட்கொண்ட பொதுமக்கள் அடுப்பு இல்லாமல் சமைக்கப்பட்ட உணவின் சுவையை அறிந்து தங்களது இல்ல விசேஷ நிகழ்வுகளிலும் எங்களை அழைக்க தொடங்கினர். தற்போது தமிழக முழுவதும் கேட்டரிங் பணியை செய்து வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது 2200-க்கும் மேற்பட்ட வகையான உணவுகள் தயாரிப்பதும், ஒரே நேரத்தில் 3000 பேருக்கு உணவு தயாரித்து உணவு பரிமாற முடியும். இந்த முறையில் உணவு தயாரிப்பு தொடர்பாக பயிற்சி பட்டறையும் மாவட்டத்தில் நடத்தி வருகிறோம்" என்றார்

First published:

Tags: Local News, Theni