ஹோம் /தேனி /

ஆந்திராவிலிருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்.. சிறுவன் உட்பட ஐவர் கைது...

ஆந்திராவிலிருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்.. சிறுவன் உட்பட ஐவர் கைது...

Police

Police station 

Cumbum | கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் குறுக்கு காட்டுப்பாதையான மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற சிறுவன் உள்பட 5 பேரைகம்பம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடமிருந்த 123 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  கஞ்சா கடத்தல் :-

  தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் குறுக்கு காட்டுப்பாதையான மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு ஆய்வாளர்டி.விஜய் ஆனந்த் தலைமையில் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

  அப்போது சாக்குமூடைகள் மற்றும் மோட்டார் பைக்குடன் நின்றிருந்த 5 நபர்களை விசாரித்து, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை சோதனை செய்ததில் 123 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரிடமும் விசாரணை செய்தனர்.

  விசாரணையில் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த அன்பு, சஞ்சய்குமார், சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சுப்பிரமணி மற்றும் கஞ்சா கடத்தி வந்தவர்களுள் 17 வயது சிறுவன் ஒருவன் என்பதும் தெரியவந்தது.

  ஆந்திரா மாநிலத்திலிருந்து சென்னை வழியாக கம்பம் நகருக்கு கொண்டு வந்து, இங்கு பதுக்கி வைத்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

  போலீசார் அவர்களிடமிருந்து 123 கிலோ கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என்றும், இதே கஞ்சா கேரளாவுக்கு கொண்டு சென்றால் அதன் மதிப்பு ரூபாய் 55 லட்சத்து 35 ஆயிரம் என்ற அளவுக்கு விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.

  செய்தியாளர்: சுதர்ஸன்

  Published by:Arun
  First published:

  Tags: Cumbum, Police station, Theni