Home /theni /

Theni | வார்டை மேம்படுத்த தொடர் முயற்சி: கம்பம் பகுதி வார்டு கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு விழா

Theni | வார்டை மேம்படுத்த தொடர் முயற்சி: கம்பம் பகுதி வார்டு கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு விழா

கவுன்சிலருக்கு

கவுன்சிலருக்கு பாராட்டு

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியின் 11வது வார்டு கவுன்சிலரான சாதிக்கிற்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 11வது வார்டு கவுன்சிலரான சாதிக், அவரது வார்டு பகுதியில் சிறப்பாக களப்பணி ஆற்றியதற்காக கம்பம் பகுதி பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது .

வார்டு கவுன்சிலர்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியின் 11-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு, பதிவான 1,579 வாக்குகளில் சாதிக் 1,306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் நகர் மன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு, 11வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, சாக்கடை வசதி, குடிநீர், தெருவிளக்கு போன்ற தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார். தன்னுடைய வார்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினசரி வார்டு பகுதியை சுத்தப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறார்.

கவுன்சிலருக்கு பாராட்டு விழா


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுமக்கள் குப்பை கொட்டாதவாறு பச்சை தார்ப்பாய் கட்டி அங்கு செடி நட்டு அசத்தியுள்ளார். அதனை தொடர்ந்து செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து குப்பை கொட்டும் இடங்களை பசுமை சோலையாக மாற்றி உள்ளார்.

கவுன்சிலருக்கு வழங்கப்பட்ட கேடயம்


பொதுமக்கள் அதிலிருந்து மிளகாய், தக்காளி உள்ளிட்ட பொருள்களை பிடுங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர். வார்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனே தெரிவிக்கும் விதமாக வார்டு பகுதி முழுவதும் புகார் எண் அடங்கிய அறிவிப்பு பலகை ஓட்டியுள்ளார்.

தொடர்ந்து கம்பம் நகராட்சி பகுதியில் தனது வார்டு பகுதியில் சிறப்பாக களப்பணியை செய்து வரும் சாதிக் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பை நியூஸ் 18 உள்ளூர் செய்தித்தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர்ந்து மக்களுக்கான பணிகளை உடனடியாக செய்து வருவதால், பொதுமக்களிடம் பெரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வரும் கம்பம் நகர மன்ற கவுன்சிலரான சாதிக்கிற்கு கம்பம் நகர 11 வது வார்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வுகள் அமைப்பினர் சார்பாக பாராட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பாராட்டு விழா

கம்பம் நகரில் உள்ள இலாகி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப் பள்ளியில், கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவரான ஜெயினுலாபுதீன் தலைமையிலும், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் இணைந்தும், 11வது வார்டு பொதுமக்கள் இணைந்தும் சாதிக்கிற்கு பாராட்டு விழா நடத்தி நினைவு விருது வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய கவுன்சிலர் சாதிக், ’தொடர்ந்து மக்களுக்காக களப்பணிகளை செய்வது எனது முதல் பணி. நான் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி ஏற்பதற்கு முன்பாகவே சமூக ஆர்வலராக இருந்து இந்த பகுதி மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தேன். நகர மன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தொடர்ந்து பல களப்பணிகளை செய்து வருகிறேன். இதற்குப் பல இடங்களில் இருந்து எனக்கு விருது கிடைத்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடமும் விருது வாங்கியுள்ளேன். ஆனால் எனக்கு எனது வார்டு பொதுமக்கள் வழங்கிய விருது தேசிய விருதுக்கு நிகரானது. பொதுமக்கள் எனக்கு அளிக்கும் ஊக்கத்தை வைத்து தொடர்ந்து மென்மேலும் மக்களுக்காக களப்பணியாற்றுவேன்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி