ஹோம் /தேனி /

தேனியில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள்... நடனத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

தேனியில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள்... நடனத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

X
தேனி

தேனி

Theni District News : பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கம்பம் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனி திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டம் கம்பம் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சிகள் கம்பம் மொய்தீன் ஆண்டவர் அரசு பள்ளியில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் வட்டார வள மையம் இணைந்து கம்பம் பகுதியில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மொய்தீன் ஆண்டவர் பள்ளியில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையும் படிங்க : தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?

கம்பம் வட்டாரத்தில் உள்ள 19க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் குழு நடனம், தனி நடனம், கரகாட்டம் ஒயிலாட்டம் , மூலம் தங்களின் தனித்திறனை வெளி காட்டினர் .

அரசு பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் வகையிலும், பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காகவும், மாணவ மாணவர்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்தி தீய பழக்கவழக்கங்களுக்கு செல்லாமல் கல்வியை நோக்கி முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கலைத் திருவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni